×
الحجவசனம் 2

அல்-முக்தஸர்

يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى ٱلنَّاسَ سُكَـٰرَىٰ وَمَا هُم بِسُكَـٰرَىٰ وَلَـٰكِنَّ عَذَابَ ٱللَّهِ شَدِيدٌ ﴿٢﴾

அந்நாளை நீங்கள் காணும்போது பாலூட்டக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவாள். கர்ப்பமான ஒவ்வொரு பெண்ணும் அந்த நாளில் ஏற்படும் பயத்தால் தன் வயிற்றிலுள்ளதை ஈன்றுவிடுவாள். அந்த நாளின் பயங்கரத்தால் மக்கள் புத்தியிழந்து மயங்கியவர்களைப்போல் தோன்றுவார்கள். அவர்கள் மதுவின் போதையால் மயங்கியவர்களாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. அதுதான் அவர்களின் அறிவைப் போக்கிவிட்டது.