×
الحجவசனம் 26

அல்-முக்தஸர்

وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَٰهِيمَ مَكَانَ ٱلْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِى شَيْـًٔا وَطَهِّرْ بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْقَآئِمِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ ﴿٢٦﴾

தூதரே!- நாம் இப்ராஹீமுக்கு அறியப்படாமல் இருந்த கஃபாவின் இடத்தையும் அதன் எல்லையையும் தெளிவுபடுத்தியதை நினைவு கூர்வீராக. நாம் அவருக்கு வஹி அறிவித்தோம்: “நீர் வணக்க வழிபாட்டில் என்னுடன் எதையும் இணையாக்கி விடாதீர். மாறாக என்னை மட்டுமே வணங்குவீராக. என்னுடைய வீட்டை -தவாஃப் செய்து- சுற்றி வரக்கூடியவர்களுக்காகவும் தொழக்கூடியவர்களுக்காகவும் உள்ரங்கமான, வெளிரங்கமான அனைத்து வகையான அழுக்குகளிலிருந்தும் தூய்மைப்படுத்துவீராக.