அல்-முக்தஸர்
لِّيَشْهَدُوا۟ مَنَـٰفِعَ لَهُمْ وَيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ فِىٓ أَيَّامٍ مَّعْلُومَـٰتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَـٰمِ ۖ فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْبَآئِسَ ٱلْفَقِيرَ ﴿٢٨﴾
அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு, நன்மையைப் பெறல், ஒற்றுமை இன்னும் பல அவர்களுக்குப் பயனளிப்பவற்றைப் பெறுவதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் - துல்ஹஜ் பத்து மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் அதனை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அவன் வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பலிப்பிராணிகளை அவன் பெயர்கூறி அறுத்து அவனை நினைவுகூர்வதற்காகவும் அங்கு வருவார்கள். அறுக்கப்பட்ட அந்த பிராணிகளிலிருந்து உண்ணுங்கள். கடும் வறிய ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.