அல்-முக்தஸர்
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَـٰمِ ۗ فَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ فَلَهُۥٓ أَسْلِمُوا۟ ۗ وَبَشِّرِ ٱلْمُخْبِتِينَ ﴿٣٤﴾
கடந்துபோன ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளுக்காக நன்றி செலுத்தும் பொருட்டு அவனுடைய பெயர்கூறி அறுத்துப் பலியிடும் குர்பான் எனும் வணக்கத்தை நாம் ஏற்படுத்தியிருந்தோம். -மனிதர்களே!- உங்களின் உண்மையான வணங்கப்படுபவன் ஒருவன்தான். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே நீங்கள் வழிப்பட்டு அடிபணியுங்கள். -தூதரே!- அவனை உளத்தூய்மையாக பயப்படக்கூடியவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.