×
الحجவசனம் 46

அல்-முக்தஸர்

أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَآ أَوْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَـٰرُ وَلَـٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ ﴿٤٦﴾

அந்த அழிக்கப்பட்ட ஊர்களின் அடையாளங்களைக் காண்பதற்காக, தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிக்கும் இவர்கள் பூமியில் பயணம் செய்ய வேண்டாமா? அவ்வாறு செய்தால் தங்களின் அறிவால் சிந்தித்து படிப்பினை பெறலாம். அறிவுரைபெற வேண்டி அவர்களின் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க வேண்டாமா? நிச்சயமாக பார்வை குருடாகிப்போவது குருடல்ல. மாறாக அகப்பார்வை குருடாவதே அழிவை ஏற்படுத்தும் குருடாகும். அகப்பார்வையை இழந்தவரால் படிப்பினை பெறவோ, அறிவுரை பெறவோ முடியாது.