×
الحجவசனம் 72

அல்-முக்தஸர்

وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا بَيِّنَـٰتٍ تَعْرِفُ فِى وُجُوهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمُنكَرَ ۖ يَكَادُونَ يَسْطُونَ بِٱلَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ ءَايَـٰتِنَا ۗ قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكُمُ ۗ ٱلنَّارُ وَعَدَهَا ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ ﴿٧٢﴾

குர்ஆனில் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால் அவற்றை செவியேற்கும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் முகங்களில் நீர் வெறுப்பைக் காண்பீர். கடும் கோபத்தினால் நம்முடைய வசனங்களை எடுத்துரைப்பவர்களை அவர்கள் தாக்கிவிட முனைகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் உங்களின் கோபத்தை, வெறுப்பைவிட மோசமான ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அது நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள நரகமாகும். அவர்கள் செல்லும் அந்த இடம் மிகவும் தீயதாகும்.