அல்-முக்தஸர்
مَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ ﴿٧٤﴾
அவர்கள் அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தவில்லை. எனவேதான் அவனுடன் இணைத்து அவனுடைய சில படைப்புகளையும் வணங்கினார்கள். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையவன். அவனுடைய சக்தி, வல்லமையின் மூலமே, அவன் வானங்களையும் பூமியையும் அவற்றிலுள்ளதையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. இணைவைப்பாளர்கள் வணங்கும் சிலைகளோ பலவீனமானவையாக எதையும் படைக்காத இழிவானவையாக இருக்கின்றன.