அல்-முக்தஸர்
لَعَلِّىٓ أَعْمَلُ صَـٰلِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّآ ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا ۖ وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ﴿١٠٠﴾
"நான் அங்கு மீண்டும் அனுப்பப்பட்டால் நற்செயல்களைச் செய்வேன்".நீ வேண்டுவது போலல்ல விடயம். நிச்சயமாக அது அவன் வாயால் கூறும் வெறும் வார்த்தைதான். ஒருவேளை அவன் உலக வாழ்க்கையின்பால் திருப்பி அனுப்பப்பட்டாலும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டான். இறந்துவிட்ட அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும்வரை உலகத்திற்கும், மறுமைக்கும் மத்தியில் ஒரு தடுப்பில் இருப்பார்கள். தவறியதை அடைவதற்கும், வீணாக்கியதை சீராக்கவும் மீண்டும் உலகத்தின்பால் திரும்ப மாட்டார்கள்.