அல்-முக்தஸர்
فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ ۙ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَـٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۖ إِنَّهُم مُّغْرَقُونَ ﴿٢٧﴾
நம்முடைய கண்காணிப்பில் நாம் எவ்வாறு கட்ட வேண்டும் என நாம் கூறுவதுபோல் ஒரு கப்பலைக் கட்டுவீராக என்று நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். அவர்களை அழிக்குமாறு நம்முடைய கட்டளை வந்து, ரொட்டி சுடப்பயன்படும் அடுப்புகளிலிருந்து தண்ணீர் பலமான ஊற்றாக வெளிப்படும் போது, சந்ததிகள் நிலைப்பதற்காக எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றுவீராக. உமது குடும்பத்தையும் அதில் ஏற்றிக்கொள்வீராக! ஆனால் உமது மனைவி, மகன் போன்ற அழிவுக்குட்படுபவர்கள் என முன்பே அல்லாஹ்விடத்தில் தீர்மானமாகிவிட்டோரைத் தவிர. நிராகரிப்பினால் அநியாயம் இழைத்தவர்களுக்காக, அவர்களை அழிக்காமல் காப்பாற்றும்படி என்னிடம் உரையாடாதீர். நிச்சயமாக அவர்கள் -சந்தேகம் இல்லாமல்- வெள்ளப் பிரளயத்தில் மூழ்கி அழிபவர்களே.