அல்-முக்தஸர்
أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًا وَعِظَـٰمًا أَنَّكُم مُّخْرَجُونَ ﴿٣٥﴾
தன்னைத் தூதர் என்று கூறிக்கொள்ளும் இவர், நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னரும் உங்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து உயிரோடு வெளியாக்கப்பட்டே ஆவீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறாரா? இது சாத்தியம்தானா?