அல்-முக்தஸர்
أَفَلَمْ يَدَّبَّرُوا۟ ٱلْقَوْلَ أَمْ جَآءَهُم مَّا لَمْ يَأْتِ ءَابَآءَهُمُ ٱلْأَوَّلِينَ ﴿٦٨﴾
இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ் இறக்கிய குர்ஆனை நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படுவதற்காக அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துவிட்டதா? அதனால் அவர்கள் அதனைப் புறக்கணித்து பொய்ப்பிக்கிறார்களா?