×
المؤمنونவசனம் 80

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخْتِلَـٰفُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ ﴿٨٠﴾

அவனே உயிரளிக்கிறான். அவனைத் தவிர யாராலும் உயிரளிக்க முடியாது. அவனே மரணிக்கச் செய்கிறான். அவனைத் தவிர யாராலும் மரணிக்கச் செய்ய முடியாது. இரவு, பகல் என்பவற்றின் இருள், ஒளி, நீளம், சுருக்கம் என இரவு பகலில் ஏற்படும் மாற்றங்களும் அவனது ஏற்பாடே. அவனுடைய வல்லமையையும் அவன் மட்டுமே படைத்துப் பராமரிப்பவன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?