அல்-முக்தஸர்
ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ٱلسَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ ﴿٩٦﴾
தூதரே!- உமக்குத் தீங்கிழைப்போரை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அது அவர்களை மன்னித்து அவர்களின் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்வதாகும். இணைவைத்தல், பொய்ப்பித்தல்ஆகிய அவர்களின் வர்ணனைகளையும், உமக்குப் பொருத்தமற்ற சூனியம், பைத்தியம் போன்ற பண்புகளால் உம்மை அவர்கள் வர்ணிப்பதையும் நாம் நன்கு அறிவோம்.