×
النورவசனம் 11

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ ۚ لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُم مَّا ٱكْتَسَبَ مِنَ ٱلْإِثْمِ ۚ وَٱلَّذِى تَوَلَّىٰ كِبْرَهُۥ مِنْهُمْ لَهُۥ عَذَابٌ عَظِيمٌ ﴿١١﴾

நம்பிக்கையாளர்களே!- நிச்சயமாக (விசுவாசிகளின் அன்னை ஆயிஷாவைக் குறித்து) அவதூறு கூறியவர்கள் உங்களிலுள்ள ஒரு பிரிவினர்தாம். அவர்கள் இட்டுக்கட்டியதை உங்களுக்குத் தீங்காக எண்ண வேண்டாம். மாறாக அது உங்களுக்கு நன்மையானதாகும். ஏனெனில் அதில் நம்பிக்கையாளர்களுக்கு கூலியும் சோதனையும் உண்டு என்பதுடன் முஃமின்களின் தாய் நிரபராதி என்பதும் நிரூபனமாகிறது. அவர் மீது விபச்சார அவதூறு கூறுவதில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் அவதூறு கூறி அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கான கூலி உண்டு. இந்த அவதூறை ஆரம்பித்து இதில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது. இது நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபைய் இப்னு சலூலைக் குறிப்பதாகும்.