×
النورவசனம் 33

அல்-முக்தஸர்

وَلْيَسْتَعْفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱلَّذِينَ يَبْتَغُونَ ٱلْكِتَـٰبَ مِمَّا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا ۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِىٓ ءَاتَىٰكُمْ ۚ وَلَا تُكْرِهُوا۟ فَتَيَـٰتِكُمْ عَلَى ٱلْبِغَآءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوا۟ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَمَن يُكْرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعْدِ إِكْرَٰهِهِنَّ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣٣﴾

வறுமையின் காரணமாக மணமுடிக்காமல் இருப்பவர்கள் அல்லாஹ் தன் விசாலமான அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக ஆக்கும்வரை விபச்சாரத்தை விட்டுத் தவிர்ந்து பக்குவமாக இருக்கட்டும். உங்களின் அடிமைகள் பணம் கொடுத்து சுதந்திரம் பெறுவதற்காக உங்களிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அதனை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் மார்க்கப் பற்றையும் அவர்களிடம் கண்டால் அவர்களின் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் வழங்குவதாக வாக்களித்த தொகையில் ஒரு பகுதியைக் குறைப்பதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு அளித்த செல்வங்களிலிருந்து நீங்கள் அவர்களுக்கு அளியுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக உங்களின் அடிமைப் பெண்களை விபச்சாரம் செய்யும்படி நிர்ப்பந்திக்காதீர்கள். -நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை, தூய்மையையும், மானக்கேடான விடயங்களை விட்டும் தூரமாகவும் விரும்பிய தன் இரு அடிமைப் பெண்களை விபச்சாரம் புரிந்து சம்பாதிக்கும்படி வேண்டினான்-. நீங்கள் அவர்களை நிர்ப்பந்தம் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுவான். அவர்களோடு கிருபையாளனாகவும் இருக்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நிர்ப்பந்தித்தவர்களையே பாவம் சென்றடையும்.