அல்-முக்தஸர்
ٱللَّهُ نُورُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ مَثَلُ نُورِهِۦ كَمِشْكَوٰةٍ فِيهَا مِصْبَاحٌ ۖ ٱلْمِصْبَاحُ فِى زُجَاجَةٍ ۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَـٰرَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِىٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ۚ نُّورٌ عَلَىٰ نُورٍ ۗ يَهْدِى ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُ ۚ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَـٰلَ لِلنَّاسِ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿٣٥﴾
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாகவும் அவையிரண்டில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கின்றான். நம்பிக்கையாளின் உள்ளத்தில் அவனுடைய ஒளிக்கு உதாரணம் சுவரில் காணப்படும் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும். அவ்விளக்கு பிரகாசமான ஒரு கண்ணாடியில் உள்ளது. அது முத்தைப் போன்று மின்னக்கூடிய நட்சத்திரத்தைப் போன்றது. அவ்விளக்கு வளம்மிக்க சைத்தூன் மரத்திலுள்ள எண்ணெய்யால் எரிக்கப்படுகிறது. அந்த மரத்தை காலையிலோ மாலையிலோ சூரியனைவிட்டு எதுவும் மறைக்காது. அந்த எண்ணெயில் நெருப்பு சேராவிட்டாலும் அதன் தூய்மையினால் அது மின்னுகிறது. எனவே நெருப்பு சேர்ந்தால் எவ்வாறு மின்னும்? கண்ணாடி ஒளியின் மீது விளக்கின் ஒளி. இவ்வாறுதான் நேர்வழி என்னும் ஒளியால் பிரகாசமடைந்த நம்பிக்கையாளனின் உள்ளமும். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு குர்ஆனைப் பின்பற்றும் பாக்கியத்தை அளிக்கிறான். அல்லாஹ் விஷயங்களை அதுபோன்ற உதாரணங்களைக்கொண்டு தெளிவுபடுத்துகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.