×
النورவசனம் 43

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُزْجِى سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهُۥ ثُمَّ يَجْعَلُهُۥ رُكَامًا فَتَرَى ٱلْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَـٰلِهِۦ وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مِن جِبَالٍ فِيهَا مِنۢ بَرَدٍ فَيُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ وَيَصْرِفُهُۥ عَن مَّن يَشَآءُ ۖ يَكَادُ سَنَا بَرْقِهِۦ يَذْهَبُ بِٱلْأَبْصَـٰرِ ﴿٤٣﴾

தூதரே!- நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ்தான் மேகங்களை இழுத்து வந்து பின்னர் அவற்றின் சில பகுதிகளை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, பலத்தால் மலைபோன்ற கனமான மேகத்திலிருந்து சிறுகற்கலைப் போன்ற ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த குளிர்ந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களை விட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் கடும் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது.