×
النورவசனம் 45

அல்-முக்தஸர்

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّن مَّآءٍ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٤٥﴾

அல்லாஹ் பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள் அனைத்தையும் விந்திலிருந்து படைத்துள்ளான். அவற்றில் சில பாம்பைப் போன்று தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. அவ்வற்றில் சில, மனிதர்கள், பறவைகளைப் போன்று தம் இரு கால்களால் நடந்து செல்கின்றன. அவற்றில் சில கால்நடைகளைப் போன்று நான்கு கால்களால் செல்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட, குறிப்பிடப்படாதவைகளில் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல.