அல்-முக்தஸர்
لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَـٰلِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْـُٔولًا ﴿١٦﴾
அந்த சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பும் இன்பங்கள் உண்டு. இது அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். அவனை அஞ்சக்கூடிய அடியார்கள் அவனிடம் அதனைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். தன் வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான்.