×
الفرقانவசனம் 22

அல்-முக்தஸர்

يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَـٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَّحْجُورًا ﴿٢٢﴾

மரணிக்கும் போதும், மண்ணறையிலும், மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் போதும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படும் போதும், நரகத்தில் நுழையும் போதும் நிராகரிப்பாளர்கள் வானவர்களைக் காணும் நாளில் இவர்களுக்கு முஃமின்களுக்கு உள்ளது போன்று எந்த நற்செய்தியும் இருக்காது. அப்போது வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களுக்கு நற்செய்தி கூறுவதை அல்லாஹ் தடுத்துவிட்டான்.”