அல்-முக்தஸர்
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَـٰهُ تَرْتِيلًا ﴿٣٢﴾
அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆன் முஹம்மதின் மீது சிறிது சிறிதாக இறக்கப்படாமல் ஒரேயடியாக இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? ” -தூதரே!- உம் உள்ளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். விளங்குவதற்கும் மனனம் செய்வதற்கும் இலகுவாக அமைய வேண்டும் என்பதற்காகவே நாம் இதனை பகுதிபகுதியாக இறக்குகின்றோம்.