×
الشعراءவசனம் 15

அல்-முக்தஸர்

قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَـٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ ﴿١٥﴾

அல்லாஹ் மூஸாவிடம் கூறினான்: “ஒருபோதும் இல்லை. அவர்கள் உம்மைக் கொல்ல மாட்டார்கள். நீரும் உம் சகோதரர் ஹாரூனும் உங்களின் நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய நம் சான்றுகளைக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக உங்கள் இருவருக்கும் உதவிசெய்து உறுதிப்படுத்துவதன் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். நீங்கள் கூறுவதையும் உங்களிடம் கூறப்படுவதையும் செவியேற்றுக் கொண்டிருப்பேன். அவற்றில் எதுவும் நம்மைவிட்டுத் தப்பிவிட முடியாது.