அல்-முக்தஸர்
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَـٰدِمِينَ ﴿١٥٧﴾
அவர்கள் அதனைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள். அவர்களில் மிகவும் துஷ்டன் அதனைக் கொன்றுவிட்டான். நிச்சயமாக வேதனை தங்கள் மீது சந்தேகம் இல்லாமல் உறுதியாக இறங்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் தாங்கள் செய்த செயலுக்காக வருத்தப்பட்டு நின்றார்கள். ஆனால் வேதனையைக் கண்ணால் காணும் போது வருத்தப்படுவது எந்தப் பயனையும் தராது.