அல்-முக்தஸர்
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَـٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ ﴿٦١﴾
இரு கூட்டத்தாரும் - ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் மூஸாவும் அவரது கூட்டத்தாரும் - நேருக்குநேர் எதிர்கொண்டபோது மூஸாவின் தோழர்கள் அவரிடம் கூறினார்கள்: “நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் நம்மைப் பிடித்துவிடுவார்கள். நமக்கு அவர்களுடன் மோதும் பலம் இல்லை.”