அல்-முக்தஸர்
فَلَمَّآ أَنْ أَرَادَ أَن يَبْطِشَ بِٱلَّذِى هُوَ عَدُوٌّ لَّهُمَا قَالَ يَـٰمُوسَىٰٓ أَتُرِيدُ أَن تَقْتُلَنِى كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِٱلْأَمْسِ ۖ إِن تُرِيدُ إِلَّآ أَن تَكُونَ جَبَّارًا فِى ٱلْأَرْضِ وَمَا تُرِيدُ أَن تَكُونَ مِنَ ٱلْمُصْلِحِينَ ﴿١٩﴾
மூஸா, தனக்கும் இஸ்ரவேலர்களைச் சேர்ந்த அந்த மனிதனுக்கும் எதிரியாக இருந்த கிப்தியைப் பிடிக்க நாடியபோது இஸ்ரேலிய குலத்தைச் சேர்ந்த அந்த மனிதன், மூஸா தன்னைப் பார்த்து (நீ தெளிவான கலகக்காரன்) எனக் கூறியதால், மூஸா தன்னைத்தான் தாக்கப் போகிறார் என எண்ணியவனாகக் கூறினான்: “நேற்று ஒரு மனிதனைக் கொன்றவாறு என்னையும் கொல்ல நினைக்கிறீரா? நீர் மக்களைக் கொலை செய்து அநியாயக்காரனாக விரும்புகின்றாய். சண்டையிடும் இரு மனிதர்களிடையே சமாதானம் செய்பவனாக இருக்க விரும்பவில்லை.”