×
القصصவசனம் 31

அல்-முக்தஸர்

وَأَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ ۚ يَـٰمُوسَىٰٓ أَقْبِلْ وَلَا تَخَفْ ۖ إِنَّكَ مِنَ ٱلْـَٔامِنِينَ ﴿٣١﴾

”உமது கைத்தடியைப் போடுவீராக.” இறைவனின் கட்டளைக்கேற்ப அவர் தம் கைத்தடியைப் போட்டார். நிச்சயமாக அது பாம்பைப் போன்று வேகமாக அசைந்து ஓடுவதைக் கண்டதும் திரும்பிப் பார்க்காமல் பயந்து வெருண்டோடிவிட்டார். பயத்தினால் திரும்பி வரவும் இல்லை. இறைவன் அழைத்தான்: “மூஸாவே! முன்னால் வாரும். அதற்குப் பயப்பட வேண்டாம். நிச்சயமாக நீர் அதிலிருந்தும் நீர் பயப்படும் ஏனையவற்றிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவராக இருக்கின்றீர்.”