×
القصصவசனம் 55

அல்-முக்தஸர்

وَإِذَا سَمِعُوا۟ ٱللَّغْوَ أَعْرَضُوا۟ عَنْهُ وَقَالُوا۟ لَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ سَلَـٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى ٱلْجَـٰهِلِينَ ﴿٥٥﴾

நம்பிக்கைகொண்ட இந்த வேதக்காரர்கள் வீணான வார்த்தைகளைச் செவியுற்றால் அவற்றைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறார்கள். அவர்கள் அவ்வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்களிடம் கூறுகிறார்கள்: “நாங்கள் செய்த செயல்களுக்கான கூலி எங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்த செயல்களுக்கான கூலி உங்களுக்குக் கிடைக்கும். நாங்கள் உங்களை ஏசவோ, துன்புறுத்தவோ மாட்டோம். மார்க்கத்துக்கும் உலகுக்கும் பாதிப்பு, தீங்கு ஏற்படும் என்பதால் மூடர்களுடன் நட்பு கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.