அல்-முக்தஸர்
مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ ﴿٤١﴾
தங்களுக்குப் பயனளிக்கும் அல்லது பரிந்துரை செய்யும் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வை விடுத்து, சிலைகளை வணங்கும் இணைவைப்பாளர்களுக்கு உதாரணம் சிலந்தியைப் போன்றதாகும். தன் மீதான அத்துமீறலில் இருந்து அது தன்னைக் காத்துக்கொள்வதற்காக ஒரு வீட்டை அமைத்துக்கொண்டது. வீடுகளில் மிகவும் பலவீனமானது சிலந்தியின் வீடுதான். அது சிலந்தியை விட்டும் எந்தவொரு எதிரியையும் தடுக்காது. அவ்வாறுதான் அவர்களின் சிலைகள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ, பரிந்துரை செய்யவோ சக்தி பெறாது. இணைவைப்பாளர்கள் இதனை அறிந்திருந்தால் அல்லாஹ்வைவிடுத்து சிலைகளைத் தாம் வணங்கும் தெய்வங்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.