அல்-முக்தஸர்
مَن كَانَ يَرْجُوا۟ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَـَٔاتٍ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ﴿٥﴾
கூலி பெறுவதற்காக மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் அறிந்துகொள்ளட்டும், அதற்கு அல்லாஹ் நிர்ணயித்த தவணை விரைவில் வந்துவிடும். அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் தவறாது. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.