அல்-முக்தஸர்
وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿١٠٣﴾
நம்பிக்கையாளர்களே! குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். பிரிவினையை உண்டாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அற்ப காரணங்களுக்காகக்கூட ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளும் எதிரிகளாக இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்கள் உள்ளங்களை ஒன்றுசேர்த்தான். அவனது அருளால் நீங்கள் மார்க்க சகோதரர்களாக, ஒருவருக்கொருவர் நலம்நாடுபவர்களாக, அன்பானவர்களாக ஆகிவிட்டீர்கள். உங்களின் நிராகரிப்பினால் நரக விளிம்பின் ஓரத்தில் இருந்தீர்கள். இஸ்லாத்தின்மூலம் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றினான். ஈமானின்பால் உங்களுக்கு வழிகாட்டினான். இவ்வாறு நீங்கள் நேரான வழியை அடைந்து அதில் நிலைத்திருப்பதற்காக உலகிலும் மறுமையிலும் உங்களின் நிலமைகளைச் சீர்படுத்தக்கூடியவற்றை தெளிவுபடுத்துகிறான்.