×
آل عمرانவசனம் 106

அல்-முக்தஸர்

يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا ٱلَّذِينَ ٱسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَـٰنِكُمْ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ ﴿١٠٦﴾

மறுமைநாளில் இந்தக் கடும் வேதனையை அவர்கள் சந்திப்பார்கள். அப்போது நம்பிக்கையாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியால், நிம்மதியால் பொலிவாக இருக்கும். நிராகரிப்பாளர்களின் முகங்கள் துக்கத்தால், கவலையால் கருமையாக இருக்கும். அந்த நாளில் எவர்களது முகங்கள் கருத்துவிடுகிறதோ அவர்களிடம் கூறப்படும்: அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கு யாரையும் இணையாக்கக்கூடாது என்று அவன் உங்களிடம் பெற்ற வாக்குறுதியையும் நம்பி எற்றுக்கொண்ட பிறகு நிராகரித்தீர்கள் அல்லவா? உங்களின் நிராகரிப்பின் காரணமாக அவன் உங்களுக்குத் தயார்படுத்தி வைத்துள்ள வேதனையைச் சுவையுங்கள்.