அல்-முக்தஸர்
لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًى ۖ وَإِن يُقَـٰتِلُوكُمْ يُوَلُّوكُمُ ٱلْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴿١١١﴾
நம்பிக்கையாளர்களே! அவர்கள் உங்களை எவ்வளவுதான் வெறுத்தாலும் உங்களின் மார்க்கத்திலோ உயிர்களுக்கோ அவர்களால் சேதம் விளைவிக்க முடியாது. ஆயினும் மார்க்கத்தைக் குறைகூறுதல், உங்களைப் பரிகசித்தல் போன்ற செயல்களைச் செய்து தம் நாவுகளால் உங்களுக்குத் தொல்லையளிப்பார்கள். அவர்கள் உங்களுடன் போரிட்டால் உங்கள் எதிரில் தோல்வியுற்றோராக ஓடிவிடுவார்கள். உங்களுக்கு எதிராக அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்.