×
آل عمرانவசனம் 124

அல்-முக்தஸர்

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَـٰثَةِ ءَالَـٰفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُنزَلِينَ ﴿١٢٤﴾

தூதரே! பத்ருப்போரில் இணைவைப்பாளர்களுக்கு உதவிப்படைகள் வந்ததை கேள்விப்பட்ட நம்பிக்கையாளர்களை நீர் உறுதிப்படுத்தி அவர்களிடம், “போரில் உங்களை பலப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வது போதாதா?” எனக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக.