அல்-முக்தஸர்
ٱلَّذِينَ يُنفِقُونَ فِى ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلْكَـٰظِمِينَ ٱلْغَيْظَ وَٱلْعَافِينَ عَنِ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ ﴿١٣٤﴾
இறையச்சமுடையவர்களே செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள். பழிவாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தமக்கு அநீதி இழைத்தவர்களை மன்னித்துவிடுவார்கள். இத்தகைய பண்புகளை உடைய நல்லவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.