×
آل عمرانவசனம் 137

அல்-முக்தஸர்

قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ ﴿١٣٧﴾

உஹதுப்போரில் ஏற்பட்ட இழப்புகளால் நம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அல்லாஹ் கூறினான்: நிராகரிப்பாளர்களை அழிப்பதிலும், நம்பிக்கையாளர்களைச் சோதித்த பிறகு இறுதி முடிவை அவர்களுக்கு சாதகமாக ஆக்குவதிலும் இறைவனின் நியதிகள் உங்களுக்கு முன்னரும் நிகழ்ந்தே இருக்கின்றன.அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்களின் கதி என்னவாயிற்று, என்பதை பூமியில் பயணம் செய்து படிப்பினை பெறும் கண்ணோட்டத்தோடு பாருங்கள். அவர்களின் வசிப்பிடங்கள் வெற்றிடமாகி விட்டன. அவர்களின் ஆட்சி நீங்கிவிட்டது.