×
آل عمرانவசனம் 150

அல்-முக்தஸர்

بَلِ ٱللَّهُ مَوْلَىٰكُمْ ۖ وَهُوَ خَيْرُ ٱلنَّـٰصِرِينَ ﴿١٥٠﴾

இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அவர்களால் ஒருபோதும் உங்களுக்கு உதவ முடியாது. மாறாக அல்லாஹ்தான் உங்களின் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவக்கூடியவன். எனவே அவனுக்கே கீழ்ப்படியுங்கள். அவனே மிகச் சிறந்த உதவியாளன். அவனைத்தவிர உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.