அல்-முக்தஸர்
وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ ۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۖ وَلَقَدْ عَفَا عَنكُمْ ۗ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ ﴿١٥٢﴾
அல்லாஹ் உஹதுப்போரில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவிசெய்து, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினான். அல்லாஹ்வின் அனுமதிகொண்டு அவர்களை நீங்கள் கடுமையாக வெட்டிச்சாய்த்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர் தூதர் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு உறுதியாக நில்லாமல் உங்களது இடங்களில் தொடர்ந்திருப்பதா அல்லது அதனை விட்டுவிட்டு போர்ச்செல்வங்களை திரட்டுவதா என உங்களுக்கு மத்தியில் கருத்துவேறுபட்டு எச்சந்தர்ப்பத்திலும் குறித்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்ற தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். உங்களின் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் விரும்பும் உதவியை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய பின்னரும் அது நிகழ்ந்தது. உங்களில் இவ்வுலகச் செல்வங்களை விரும்புவர்கள்தாம் தங்களின் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்கள். உங்களில் மறுமையை விரும்புபவர்கள் தூதரின் கட்டளைப்படி தங்களின் இடத்திலேயே உறுதியாக நின்றார்கள். பின்னர் அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு, அவர்களை விட்டும் உங்களைத் திருப்பி அவர்களை உங்கள் மீது ஆதிக்கம் கொள்ளச் செய்தான். உறுதியுடன் பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாளர்கள் யார், நிலைகுலையும் பலவீனர்கள் யார் என்பது தெரிவதற்காக இவ்வாறு செய்தான். தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் மீது பேரருள் புரியக்கூடியவன். அவர்களுக்கு ஈமானின் பக்கம் வழிகாட்டியுள்ளான். அவர்களின் தவறுகளை மன்னித்தும்விட்டான். அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்காக அவர்களுக்குக் கூலியும் வழங்கிவிட்டான்.