அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِى قُلُوبِهِمْ ۗ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿١٥٦﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நிராகரிப்பாளர்களான நயவஞ்சகர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் தமது உறவினர்களிடம், வாழ்வாதாரம் தேடி அல்லது போர்செய்வதற்காக பயணம் செய்து கொல்லப்பட்ட அல்லது இறந்தவர்களைக் குறித்து, “அவர்கள் புறப்படாமல் நம்மிடத்தில் இருந்திருந்தால், போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்கவோ இறந்திருக்கவோ மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களது உள்ளங்களில் கைசேதமும் கவலையும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். தனது நாட்டத்தின் பிரகாரம் வாழ்வையும் மரணத்தையும் அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. அவன் தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவர்கள் வீட்டில் அமர்ந்திருப்பதால் விதியைத் தடுக்கவும் முடியாது. புறப்படுவதால் விரைவாக்கவும் முடியாது. உங்களின் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.