அல்-முக்தஸர்
ٱلصَّـٰبِرِينَ وَٱلصَّـٰدِقِينَ وَٱلْقَـٰنِتِينَ وَٱلْمُنفِقِينَ وَٱلْمُسْتَغْفِرِينَ بِٱلْأَسْحَارِ ﴿١٧﴾
அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் தீமைகளை விடுவதிலும் துன்பங்களை எதிர்கொள்வதிலும் பொறுமையாளர்கள்; தங்களின் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்கள்; அல்லாஹ்வுக்கு முழுமையாக கீழ்ப்படிபவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்கள்; இரவின் இறுதிப் பகுதியில் பாவமன்னிப்புக் கோருபவர்கள். ஏனெனில் அந்நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிக நெருக்கமானது. மேலும் உள்ளம் அனைத்துவகையான விஷயங்களை விட்டும் காலியானதாக இருக்கும்.