×
آل عمرانவசனம் 186

அல்-முக்தஸர்

لَتُبْلَوُنَّ فِىٓ أَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَذًى كَثِيرًا ۚ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ ٱلْأُمُورِ ﴿١٨٦﴾

நம்பிக்கையாளர்களே! உங்களின் செல்வங்களில் கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ அதில் ஏற்படும் ஆபத்துகளைக்கொண்டோ நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மார்க்கத்தின் கடமைகளை நிறைவேற்றுவதைக்கொண்டோ பலவிதமான சோதனைகளைக்கொண்டோ உங்கள் உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் உங்களின் மார்க்கத்தைக் குறித்தோ உங்களைக் குறித்தோ நோவினைதரும் ஏராளமான விஷயங்களைச் செவியுறுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலும் சோதனைகளிலும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க காரியமும் போட்டியிடுபவர்கள் போட்டியிடும் விடயமுமாகும்.