×
آل عمرانவசனம் 193

அல்-முக்தஸர்

رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ ﴿١٩٣﴾

எங்கள் இறைவா! "ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள்" என்று ஈமானின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளரான முஹம்மத் (ஸல்) அவர்களது அழைப்பைச் செவியுற்று நாங்கள் அவர் அழைக்கும் விஷயத்தின்மீது நம்பிக்கைகொண்டோம். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றினோம். எனவே எங்கள் பாவங்களை மறைத்துவிடுவாயாக. எமது குறைகளை அம்பலப்படுத்திவிடாதே. எங்களின் குறைகளை கண்டும்காணாமல் விட்டுவிடுவாயாக. அதற்காக எங்களைத் தண்டித்துவிடாதே. நற்செயல்கள் செய்வதற்கும் தீமைகளை விடுவதற்கும் வாய்ப்பை வழங்கி நல்லவர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக.