அல்-முக்தஸர்
فَإِنْ حَآجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِىَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِ ۗ وَقُل لِّلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْأُمِّيِّـۧنَ ءَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا۟ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ ﴿٢٠﴾
தூதரே! உம்மீது இறக்கப்பட்ட சத்தியம் குறித்து அவர்கள் உம்மிடம் விவாதம் செய்தால் அவர்களிடம் கூறிவிடும், “நானும் என்னைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து விட்டோம் என்று.” தூதரே! வேதக்காரர்களிடமும் இணைவைப்பாளர்களிடமும் நீர் கூறுவீராக, “உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நான் கொண்டு வந்ததை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?” அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு உம்முடைய மார்க்கத்தைப் பின்பற்றினால் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள்
இஸ்லாத்தைப் புறக்கணித்தால், உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத்தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தன் அடியார்களை பார்க்கக்கூடியவன்; அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கக்கூடியவன்.