×
آل عمرانவசனம் 23

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟ نَصِيبًا مِّنَ ٱلْكِتَـٰبِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَـٰبِ ٱللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ ﴿٢٣﴾

தூதரே! தவ்ராத்தில் உமது நபித்துவத்தைக் குறித்த அறிவு வழங்கப்பட்ட யூதர்களின் நிலையை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் கருத்துவேறுபட்டுள்ளவற்றில் தீர்வு வழங்கப்படுவதற்காக அல்லாஹ்வின் வேதமான தவ்ராத்தின் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். ஆயினும் அவர்களிலுள்ள அறிஞர்களிலும் தலைவர்களிலும் ஒரு பிரிவினர் அது தங்களின் மனஇச்சையுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக அதன் தீர்ப்பைப் புறக்கணித்துவிடுகிறார்கள். தவ்ராத்தைப் பின்பற்றுவதாகக் கருதிக்கொள்ளும் அவர்கள், தீர்வு வழங்கப்படுவதற்காக அதன் பக்கம் அழைக்கப்பட்டால் அவர்கள் விரைந்து வரக்கூடியவர்களாகவல்லவா இருக்க வேண்டும்.