×
آل عمرانவசனம் 28

அல்-முக்தஸர்

لَّا يَتَّخِذِ ٱلْمُؤْمِنُونَ ٱلْكَـٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَلَيْسَ مِنَ ٱللَّهِ فِى شَىْءٍ إِلَّآ أَن تَتَّقُوا۟ مِنْهُمْ تُقَىٰةً ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَإِلَى ٱللَّهِ ٱلْمَصِيرُ ﴿٢٨﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து அவனை நிராகரித்தவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவர் அல்லாஹ்விடமிருந்து நீங்கிவிட்டார். அல்லாஹ்வும் அவரைவிட்டு நீங்கிவிட்டான். ஆயினும் அவர்களின் ஆட்சியதிகாரத்தில் நீங்கள் இருந்து, அதனால் உங்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்களின் தீங்குகளிலிருந்து தப்பிப்பதற்காக பகைமையை மறைத்து,மென்மையான பேச்சையும், பணிவான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே அவனுக்குப் பயந்துகொள்ளுங்கள். பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அடியார்கள் அனைவரும் தமது செயல்களுக்கேற்ப கூலியைப் பெறுவதற்காக மறுமைநாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும்.