×
آل عمرانவசனம் 30

அல்-முக்தஸர்

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوٓءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُۥٓ أَمَدًۢا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفْسَهُۥ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ ﴿٣٠﴾

மறுமைநாளில் ஒவ்வொருவரும் தான் செய்த செயல்களை எவ்வித குறைவுமின்றி தன் முன்னால் காண்பார்கள். தீய செயல்கள் புரிந்தவர்கள் அவர்களுக்கும் அந்த செயல்களுக்குமிடைய நீண்ட காலத்தொலைவு இருக்கக்கூடாதா என்று ஏங்குவார்கள். ஆனால் அது எங்கே நிறைவேறப்போகிறது! அல்லாஹ் தன்னைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். எனவே பாவங்களில் உழன்று அவனுடைய கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள். அல்லாஹ் தன் அடியார்கள்மீது பரிவுடையவனாக இருப்பதனால்தான் அவர்களுக்கு அவன் எச்சரிக்கை செய்கிறான்.