×
آل عمرانவசனம் 52

அல்-முக்தஸர்

فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنْهُمُ ٱلْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِىٓ إِلَى ٱللَّهِ ۖ قَالَ ٱلْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ ﴿٥٢﴾

அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருப்பதை ஈசா கண்டபோது இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: அல்லாஹ்வின்பால் அழைப்பதற்கு எனக்கு உதவிசெய்பவர் யார்? அவரைப் பின்பற்றியவர்களில் தூய்மையானவர்கள் கூறினார்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவியாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு உம்மை நாங்கள் பின்பற்றினோம். எனவே ஈசாவே! நாங்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக.