×
آل عمرانவசனம் 7

அல்-முக்தஸர்

هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَيْكَ ٱلْكِتَـٰبَ مِنْهُ ءَايَـٰتٌ مُّحْكَمَـٰتٌ هُنَّ أُمُّ ٱلْكِتَـٰبِ وَأُخَرُ مُتَشَـٰبِهَـٰتٌ ۖ فَأَمَّا ٱلَّذِينَ فِى قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَـٰبَهَ مِنْهُ ٱبْتِغَآءَ ٱلْفِتْنَةِ وَٱبْتِغَآءَ تَأْوِيلِهِۦ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُ ۗ وَٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ ﴿٧﴾

தூதரே! அவன்தான் குர்ஆனை உம்மீது இறக்கினான். அதில் சந்தேகமற்ற தெளிவான வசனங்களும் இருக்கின்றன. அவைதான் வேதத்தின் அடிப்படையும் பெரும்பான்மையுமாகும்; கருத்துவேறுபாட்டைத் தீர்க்கும் அளவுகோளாகும். அதில் பலபொருள்தரக்கூடிய வசனங்களும் இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றின் பொருள் மயக்கமாகக் காணப்படும். சத்தியத்தை விட்டுவிலகுபவர்கள் தெளிவான வசனங்களை விட்டுவிட்டு இவ்வகையான வசனங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் மக்களிடம் சந்தேகத்தை உண்டுபண்ணி அவர்களை வழிகெடுக்க நாடுகிறார்கள். இதன்மூலம் தங்களின் மனஇச்சைக்கேற்ப, தங்களின் வழிகெட்ட சிந்தனைப் பள்ளிக்கேற்ப விளக்கமளிக்க விரும்புகிறார்கள். இந்த வசனங்களின் உண்மையான பொருளை, விளக்கத்தை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிய மாட்டார்கள். உறுதியான கல்வியைப் பெற்றவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் குர்ஆனிலுள்ள அனைத்தின்மீதும் நம்பிக்கைகொண்டோம். ஏனெனில் அது முழுக்க முழுக்க எங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும்.” மேலும் அவர்கள் தெளிவான வசனங்களைக் கொண்டு கருத்து மயக்குமள்ள வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள். அறிவுடையோர்தாம் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.