அல்-முக்தஸர்
وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَـٰبٍ وَحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ ۚ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى ۖ قَالُوٓا۟ أَقْرَرْنَا ۚ قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ ﴿٨١﴾
தூதரே! தூதர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு கூறி உறுதிமொழி வாங்கியதை நினைவுகூர்வீராக: “நான் உங்களுக்கு வேதத்தை வழங்கி ஞானத்தையும் கற்றுக்கொடுத்து நீங்கள் அடைய வேண்டிய நிலையையும் அடைந்துவிட்ட பிறகு உங்களிடமுள்ள வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய தூதர்(அவர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்) என்னிடமிருந்து வந்தால் நீங்கள் அவர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றி அவருக்கு உதவிபுரிய வேண்டும். தூதர்களே! நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு அதற்கு எனக்கு உறுதிமொழியும் வழங்குகிறீர்களா?”. அதற்கு, தூதர்கள் “நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்கள் மீதும் உங்கள் சமூகங்களின்மீதும் நீங்களே சாட்சியாக இருங்கள்.உங்கள்மீதும் அவர்கள்மீதும் உங்களுடன் சேர்ந்து நானும் சாட்சியாக இருக்கிறேன்.