அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ ٱلْأَرْضِ ذَهَبًا وَلَوِ ٱفْتَدَىٰ بِهِۦٓ ۗ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ ﴿٩١﴾
அல்லாஹ்வை நிராகரித்து, அந்நிலையிலேயே மரணித்தும் விடுபவர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு. மறுமைநாளில் அந்த வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.