அல்-முக்தஸர்
يَسْتَخْفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ ٱلْقَوْلِ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا ﴿١٠٨﴾
அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடும்போது மக்களுக்குப் பயந்து, வெட்கத்தால் மறைந்துகொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வை விட்டும் மறைந்துகொள்வதில்லை. அவன் அவர்களைச் சூழ்ந்து கொண்டுள்ளான். தவறிழைத்தவனைக் காப்பாற்றி நிரபாராதியை சந்தேகிப்பது போன்ற அவனுக்கு விருப்பமில்லாததை அவர்கள் மறைவாகத் திட்டமிட்டுச் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்தறிந்தவனாகவே இருக்கிறான். எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.